
2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்படும், மஹா தீபத்திற்கு பயன்படுத்தப்படும், ராட்சதகொப்பரையை மலை உச்சிக்கு தோலில் சுமந்தபடி ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் கோவில் ஊழியர்கள் கொண்டு சென்றனர்.
ராட்சதகொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்வதற்கு முன் அதிகாலையில் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், பசு மற்றும் யானை ருக்கு வணங்கியது. இதை முன்னிட்டு, நாளை அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசுவரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேசுவரர், ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்படும்.
இதை தொடர்ந்து, அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்படும். அப்போது, பஞ்ச மூர்த்திகள் தங்க கொடி மரம் முன் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி, தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
பின், ஆண்டுக்கு, ஒரு முறை மட்டும் பக்தர்களுக்கு அருள்பாலித்து, நடனமாடியவாறு மஹா தீப தரிசனத்தை காண, அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடி மரம் முன் எழுந்தருள்வார். மலை உச்சியில் ஏற்றப்படும் மஹா தீபம், தொடர்ந்து, 11 நாட்கள் எரியும், சுற்றுப்பகுதியில், 40 கி.மீ தூரம் வரை மஹா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.
Post a Comment