Ads (728x90)

மழைக்காலம் வந்தாலே காய்ச்சல் பீதியும் வந்துவிடுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழையில் நனைந்துவிடாமல் பாதுகாக்கிறோம். ஏனெனில் மழை வந்தாலே காய்ச்சலும் வந்துவிடும் என்று அஞ்சுகிறோம். அதுவும் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் வந்து, மக்களை குலை நடுங்க வைக்கிறது, நமது முன்னோர்கள் காய்ச்சலை விரட்டியடிக்க பல எளிய வழிகளை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அதை நாம் கடைபிடிப்பதுதான் இல்லை.

காய்ச்சல் வந்துவிட்டால் உடனே டாக்டரிடம் செல்கிறோம் டாக்டரோ ஸ்கேன் பிளட் டெஸ்ட் என்றெல்லாம் எடுக்கவைத்து டாக்டர்கள் பில் போடுகின்றனர். ஆனால் காய்ச்சலை போக்க இயற்கை பலவழிகள் வைத்துள்ளன.  காய்ச்சலை போக்கும் வழிகள்; காடியை (வினிகர்) துணியில் நனைத்து நெற்றியில் பற்று போட்டால் கடுமையான சுரமும் பதற்றமும் குணமாகும். புளிப்பு மற்றும் இனிப்பான மாதுளத்தை அதன் தோலுடன் இடித்து சாற்றை பிழிந்து சாப்பிட்டால் அடிக்கடி உண்டாகும் (முறைக்காய்ச்சல்) நோய் குணமாகும்.

புதினாக்கீரையை நீரில் ஊறவைத்து குடித்தால் கடுமையான காய்ச்சல் குறையும். பவளமல்லியை கஷாயம் செய்து குடித்தால் கடுமையான காய்ச்சல் குறையும்.இஞ்சி, மிளகு இரண்டையும் நசுக்கி நீரில் கொதிக்கவைத்து அதை வடிகட்டி பாலுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் திடீர் காய்ச்சல் மாயமாகிவிடும்.ஏழு கிராம் மிளகைப்பொடித்து அதற்கு எட்டு பங்கு நீரைக் கலந்து ஒரு பங்காய் காய்ச்சி இறக்கி முன்றுவேளை வெறும் வயிற்றில் குடித்தால் குளிர் ஜுரம் மாயமாகிவிடும்.

பப்பாளி பழத்தை துண்டுகளாக நறுக்கி சீரகப்பொடி, எலுமிச்சம் பழரசம் கலந்து சாப்பிட்டால் நீண்டநாள்பட்ட அசீரணம் மலேரியா காய்ச்சல் ஏற்பட்டு கல்லீரல் வீங்குதல் ஆகிய நோய்களுக்கு அருமருந்தாகும். செவ்வாழை பழத்துடன் சிறிது தேனும் இளநீரும் கலந்து குழைத்து உண்டால் அம்மை, டைபாய்டு, காமாலை போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகவும் நல்ல உணவாகவும் அமையும்.

பவள மல்லிகை இலையைக் காய்ச்சி சாறு பிழிந்தெடுத்து தேனை சமமாகக்கலந்து காலை, மாலை என இரண்டு வேலை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தாள் சாதாரண காய்ச்சல் மட்டுமல்ல மூளைக் காய்ச்சல் கூட குணமாகிவிடும். துளசி 50 கிராம், மிளகு 20 கிராம் இரண்டையும் மாவுபோல் அரைத்து காலை, மாலை வெண்ணீரில் குழைத்துக் கொடுத்தால் சகலவித காய்ச்சலும் தீர்ந்துவிடும்.

மாதுளம் பழத்தோல் சூரணத்துடன் சம அளவு சுக்கு, மிளகு சீரகத்தூள் கலந்து நெய் அல்லது வெண்ணையில் சாப்பிட்டால் காய்ச்சல் தீர்ந்துவிடும். தாமரைப் பூவிதழ் துளசித்துளிரிலை, உப்பு, மிளகு ஆகியவற்றை சமனெடை எடுத்து சேர்த்து அரைத்து மாத்திரைகளாக்கி உலர்த்தி வைத்துக் கொண்டு முலைப்பாலில் ஊரவைத்து மூக்கில் பிழிய சகல சுரங்களும் சன்னி தனுர்வாதம் (டெட்டனஸ்) ஆகியவை போய்விடும். தும்பை இழைச்சாற்றை சில துளிகள் மூக்கிலிட குளிர்ச்சுரம், நடுக்குவாதம் ஆகியவை போய்விடும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget