Ads (728x90)

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் நடிகையானவர் ஐஸ்வர்யா ராய். 1997ல் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில்தான் அவர் அறிமுகமானார்.

அப்படி தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யாராய், பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாகி, அமிதாப்பச்சனின் மகனான அபிசேக்பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். தற்போது 44 வயதாகும் அவர் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாகி விட்டார். இருப்பினும் இப்போதும் நடிப்பை தொடர்ந்து வருகிறார்.

அதோடு, சில படங்களில் அளவுக்கு மீறிய கிளாமராக நடித்து அதிர்ச்சி கொடுத்து வரும் ஐஸ்வர்யாராய், உலகத் திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு சிவப்பு கம்பள வரவேற்பு பெற்று வருகிறார். அந்த வகையில், தான் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் அதிநவீன டிசைனில் உடையணிந்து சென்று காண்போரை கவர்ந்திழுத்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.

இந்தநிலையில், டிசம்பர் 08 ம் தேதி மும்பையில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யாராய். அந்த நிகழ்ச் சியில் அவர் டக்சிடோ என்ற அதிநவீன கவுன் அணிந்து சென்றிருக்கிறார். கோல்டன் நிறத்தில் அவர் அணிந்திருந்த அந்த உடையின் விலை 3 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயாம்.

அதை அலெக்சில் மாபிலே என்ற டிசைனர் வடிவமைத்து கொடுத்துள்ளார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget