
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' பொங்கலுக்கு ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளன.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல TSR FILMS என்ற நிறுவனத்திடம் விற்றுள்ளார். விவேகம், மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று முதலான படங்களின் விநியோகத்தில் பங்குகொண்ட இந்த நிறுவனம், 'தானா சேர்ந்த கூட்டம்', 'அருவி', 'சதுரங்கவேட்டை-2' முதலான படங்களை வாங்கி இருக்கிறது.
இதுஒருபுறம் இருக்க இந்த படத்தை தயாரித்து வரும் 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா, சென்னை திருவள்ளுர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகிறார். இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த அவர், எப்படியாவது விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகிவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
Post a Comment