
கடந்த இரண்டு நாட்களாக மோகன்லால் 'இருவர்' படத்தில் பார்த்தது போல இளமை தோற்றத்துடன் காணப்படும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. தற்போது, தான் நடித்து வரும் 'ஒடியன்' படத்தில் இப்படி ஒரு இளம் லுக்குடன் நடிப்பதற்காக சுமார் 2௦ கிலோ வரை எடை குறைத்துள்ளார் மோகன்லால்.
இதுநாள் வரை பல இயக்குனர்கள் மோகன்லாலின் எடையை குறைத்து தங்களது படங்களில் நடிக்க அழைத்தும் அதற்கு செவி சாய்க்காத மோகன்லால், இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மற்றும் கதாசிரியர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மேல் வைத்த நம்பிக்கை காரணமாக இப்படி ஒரு உருமாற்றம் நிகழ்த்தியுள்ளாராம்.
தான் கற்பனையில் நினைத்து கதையாக எழுதிய கேரக்டருக்கு மோகன்லால் இவ்வளவு மெனக்கெட்டு உயிர்கொடுத்தது கண்டு சந்தோஷத்தில் திளைக்கிறாராம் கதாசிரியர் ஹரிகிருஷ்ணன்.
இந்த இளமை லுக்குடன் 'ஒடியன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வரும் ஜன-5 முதல் கலந்துகொள்ள இருக்கிறார் மோகன்லால்.
Post a Comment