Ads (728x90)

ரஷ்ய அதிபர் பதவிக்கு தாம் மீண்டும் போட்டியிட உள்ளதாக விளாடிமிர்புடின் அறிவித்தார்.ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் உள்ளார். இவரது பதவி காலம் 2018-ம் ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது.

இதையடுத்து அதிபர் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. ஏற்கனவே மூன்று முறை அதிபராக பதவி வகித்த புடின், வரும் அதிபர் தேர்தலிலும் மீண்டும் போட்டியிட உள்ளதாக நேற்று நடந்த நிகழ்ச்சிஒன்றில் பேசினார். விளாடிமிர் புடின் மீண்டும் அதிபரானால் 2024-ம் ஆண்டு வரை அப்பதவியில் இருப்பார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget