
ஒற்றுமை என்ற பெயரில், பங்காளிக் கட்சிகளுக்கு அதிகளவான உள்ளூராட்சி மன்றங்களை, கூட்டமைப்பின் தலைமை மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் உயர் பீடத்தினர் தாரைவார்த்துள்ளதாக அவர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீட்டில் முதல் சுற்றில் 80 சதவீத இணக்கம் எட்டப்பட்டிருந்தது. இரண்டாம் சுற்றில் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கமும் இல்லாமல்போனது.
இதனையடுத்து பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான ரெலோ, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்று அறிவித்திருந்தது.
இதனையடுத்து ஏற்பட்ட பிணக்கை சரிசெய்யும் நோக்குடன், கொழும்பில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் நடத்தப்பட்டது.
எதிர்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்காளிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்
Post a Comment