
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மொரகஹகந்த நீர்த்தேக்கம் காரணமாக, பாரம்பரியமிக்க 12 கிராமங்கள் இலங்கை வரைப்படத்தில் இருந்து மறைந்துள்ளன.
2007ஆம் ஆண்டு மொரகஹகந்த நீர்த்தேக்க நிர்மாணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது நீர் நிரப்பும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
லக்கல பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த நீர்த்தேகத்தில் கிராம சேவகர் பிரிவில் உள்ள 12 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பண்டைய கால மன்னர் ஆட்சிக்குட்பட்ட ரஜாவெல, கோன்கஹவெல, கடவத்தை, தம்பரவ, கல்பொருகொல்ல, எலகமுவ, தலாகொட, மில்லகஹமுலதென்ன, கோன்கஹவெல, மெதபிஹில்ல, மாரகமுவ ஆகிய கிராமங்கள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக அந்த கிராமங்கள் இலங்கை வரைப்படத்தில் மறைந்துள்ளன. இதற்கு மேலதிகமாக களு கங்கை நீர்த்தேகத்தில் எதிர்வரும் காலங்களில் மேலும் 12 கிராமங்கள் நீரில் மூழ்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கும் கிராமங்களுக்குப் பதிலாக களு கங்கையின் கீழ் பள்ளத்தாக்கிலும், மெதிரிகிரிய பிரதேசத்தின் புதிய கிராமம் ஒன்றிலும் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment