Ads (728x90)

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள செகந்திரபாத் என்ற நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வரவேற்பாளராக பணிபுரிபவர் சந்தியா ராணி. அவரை, அதே நிறுவனத்தில் பணிபுரிந்த சாய்கார்த்திக்(25) என்பவன் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை சந்தியா பணிமுடித்து வீடு திரும்பிய போது, சாய்கார்த்திக், அவரை தடுத்து நிறுத்தினான். அப்போது, தன்னை திருமணம் செய்ய மறுப்பதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினான். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சந்தியாவை கீழே தள்ளிவிட்டு, மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீவைத்துவிட்டு தப்பி சென்றான்.

தீயில் கருகிய சந்தியாவை பார்த்த அங்கிருந்த மக்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். அதற்கு முன்னதாக அவர் போலீசாரிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அதில் திருமணம் செய்ய மறுத்ததால், சாய்கார்த்திக் தன்னை தீவைத்து எரித்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து கொலை, பின் தொடர்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget