Ads (728x90)

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளின் 8 மாவட்­டங்­க­ளில் தனித்­துக் கள­மி­றங்­கி­யுள்ள தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எதிர்­வ­ரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை­யி­லான 4 நாள்­கள் மாவட்­ட ரீதி­யாக வேட்­பா­ளர்­களை ஒன்­றி­ணைத்­துத் தொடர்ச்­சி­யான கூட்­டங்களை நடத்­த­வுள்­ளது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

எதிர்­வ­ரும் 28ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தி­லும், கிளி­நொச்­சி­யி­லும் அதனை அடுத்து வரும் நாள்­க­ளில் முல்­லைத்­தீவு, மன்­னார், வவு­னியா மாவட்­டங்­க­ளி­லும் 30ஆம் மற்­றும் 31ஆம் திக­தி­க­ளில் கிழக்கு மாகா­ணத்­தில் மூன்று மாவட்­டங்­க­ளி­லும் கருத்­த­ரங்­கு­கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

இந்­தச் செயற்­பாட்­டு­கள் நிறை­வ­டைந்த கையோடு தேர்­தல் அறிக்கை வெளி­யீடு செய்­யும் தினம் இறுதி செய்­யப்­ப­ட­வுள்­ளது என்­றும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget