
இதுகுறித்து இந்தோனேசிய போலீஸ் தரப்பில், ''இந்தோனேசியாவிலுள்ள சுமந்திரா தீவில் 55 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் பலியாகினர். படகின் கேப்டனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் முசி ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 9 பேர் பலியாகினர். ஒரு வாரத்தில் மட்டும் இந்தோனேசியாவில் இரு படகு விபத்துகள் நடந்துள்ளன.
இந்தோனேசியாவைப் பொறுத்தவரை அது ஒரு தீவு தேசமாக திகழ்கிறது. மொத்தம் அந்நாட்டில் 17,000 தீவுகள் காணப்படுகின்றன. பெரும்பாலான தீவுகளுக்கு மக்கள் படகின் வழியாக பயணம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக அந்நாட்டில் படகு விபத்துகள் அதிக அளவு நிகழ்கின்றன.
இதன் காரணமாக இந்தோனேசிய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என எச்சரிக்கை மணிகள் சமீப காலமாக ஓங்கி அடிக்கத் தொடங்கியுள்ளன.
Post a Comment