Ads (728x90)

2018-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் கிளம்பிய ஹவாயியன் விமானம், 2017-ல் தரை இறங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலகில் உள்ள கண்டங்களுக்கு இடையேயான நேர வேறுபாட்டால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் புத்தாண்டு முதலில் பிறக்கிறது. அந்த வகையில் நியூசிலாந்தில் 2018-ம் ஆண்டு பிறந்தவுடன், அங்குள்ள ஆக்லாந்து நகரில் இருந்து ஹவாயியன் ஏர்லைன் 446 என்ற விமானம் கிளம்பியது. அங்கிருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஹோனோலுலு நகரை 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி 10.15 மணிக்குத் தரையிறங்கியது.

முன்னதாக டிசம்பர் 31-ம் தேதி 11.55 மணிக்கு விமானம் ஆக்லாந்தில் இருந்து கிளம்புவதாக இருந்தது. ஆனால் 10 நிமிட தாமதம் காரணமாக புத்தாண்டு நள்ளிரவு 12.05 மணிக்குக் கிளம்பியுள்ளது. அங்கிருந்து 9 மணி நேரம் பயணம் செய்து டிசம்பர் 31-ம் தேதி இரவு 10.15 மணிக்கு விமானம் தரையிறங்கியது.

நியூசிலாந்துக்கும், ஹவாய் தீவுக்கும் இடையே சுமார் 23 மணி நேர இடைவெளி இருந்ததால் இந்த சம்பவம் நடந்தது.

இதைப் பற்றிக் குறிப்பிட்ட பத்திரிகையாளர் ஒருவர், ''காலங்களுக்கு இடையேயான பயணம் இது!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget