Ads (728x90)

கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி நடுத்தர ரக ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. சன்சோன் நகரில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டது. அந்த ஏவுகணை தவறுதலாக வடகொரியாவின் டாக்சோன் நகரைத் தாக்கியது. சுமார் 2 லட்சம் பேர் வசிக்கும் அந்த நகரின் குறிப்பிட்ட பகுதியை ஏவுகணை தாக்கி தரைமட்டமாக்கியது.

அமெரிக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் இந்த அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “டாக்சோன் நகரின் தொழிற்சாலை வளாகம் அல்லது விளைநிலங்களை ஏவுகணை தாக்கி அழித்துள்ளது” என்று தெரிவித்தன. இதில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது தெரியவில்லை

அமெரிக்கா - வடகொரியா இடையே போர் ஏற்பட்டால் வடகொரியா ஏவுகணை மூலம் அணு ஆயுத தாக்குதல் நடத்த முற்படும். அந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாக்காமல் தவறுதலாக பூமியின் எந்தப் பகுதியையும் தாக்கும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 10-ல் வடகொரியாவின் மேன்டப் மலை சுரங்கத்தில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனையின்போது சுரங்கம் உடைந்து 200 பேர் பலியானதாக தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget