
இதனைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தரப்பில், " மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுரஸ், கேமன் தீவுகள் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியது. கடலுக்கடியில் சுமார் 202 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு மெக்சிகோ, கியூபா ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கரீபியன் தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் சுனாமி பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் குறித்து மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுரஸின் அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்," மக்கள் அனைவரும் பொறுமை காணுங்கள், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலோரங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Post a Comment