
இதனையடுத்து அருகில் இருந்த மக்கள் அனைவரும் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர்.
இதுதொடர்பாக சுவிஸ் இணையதளம் வெளியிட்ட செய்தியில், ''செவ்வாய்க்கிழமை அன்று ஜூரிச் ஆப்பிள் விற்பனையகத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
இதுகுறித்துக் கூறிய ஜூரிச் மாநில காவல்துறை, ஆப்பிள் போனை பழுதுபார்க்கும் ஊழியர் ஒருவர் பேட்டரியை எடுக்கும்போது வெடித்தது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த விபத்தால் ஊழியரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்த 7 ஊழியர்களும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் சுதாரித்த அவர்கள் வெடித்த பேட்டரி மீது மணலை வீசினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையே 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அத்துடன் தீயணைப்புத் துறையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டனர்'' என்று கூறப்பட்டுள்ளது.
நடந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்
Post a Comment