Ads (728x90)

ஜனாதிபதியாக தான் பதவி வகிக்கும் காலத்தில் கட்சியை மட்டுமன்றி, அரசையும் நாட்டையும் கூட தூய்மையானதாக மாற்றிக் காட்டப் போவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பொன்றில் நேற்று (12) பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் ஆகியவை குறித்த முறைகேடுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கப் போகிறேன். அவ்வாணைக்குழு நடத்தும் விசாரணையின் முடிவில், தற்போது பதவியில் உள்ள பல ஊழல்வாதிகள் வெளிச்சத்துக்கு வருவார்கள்” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget