
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கைது செய்வதன் பின்னணியில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளதாக முதலமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக் ஷ குடும்பத்திலுள்ளவர்கள் எவரும் அவ்வாறில்லை. அதனால்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜபக் ஷவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்திருந்தார்.
மேலும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலேயே தற்போது பேசப்படுகிறது. அதனால் ஏனைய சிறு சிறு மோசடிகள் பற்றி எவரும் கதைப்பதில்லை. பேக்கரி உணவுப் பொருட்களுக்குப் பயன்படும் கோதுமைத் தானிய இறக்குமதியின் போது அதில் பாரிய மோசடி இடம்பெறுகிறது.
அக்கோதுமைத்தானியத்தின் இறக்குமதியில் ஒரு கிலோ கிராமுக்கு ஒன்பது ரூபா வரி விலக்குச் செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவினாலேயே அவ்வரி விலக்குச் செய்யப்பட்டுள்ளது. வருடம் ஒன்றுக்கு இரண்டு பில்லியன் கிலோகிராம் கோதுமைத்தானியம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆகவே வருடம் ஒன்றுக்கு 18 பில்லியன் ரூபா நிதி மிச்சப்படுத்தப்படுகிறது.
எனவே அவ்வாறு வரி விலக்குச் செய்யப்படுமாக இருந்தால் பாண் உட்பட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால் விலை குறைக்கப்படவில்லை. ஆகவே வரி விலக்கு மூலம் மிச்சப்படுத்தப்படும் குறித்த நிதி எங்கு செல்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
Post a Comment