Ads (728x90)

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் யாழிற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விஜயத்தின் போது மண்டைதீவு பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நிலப் பகுதியை பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,

எமது இளைஞர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊடாக பல்வேறு திறமைகளை வெளிப்படுதிவருகின்றனர். இதன் மூலம் பாடசாலை விளையாட்டு வீரர்களும் தேசிய அளவில் பிரகாசிக்க முடிகின்றது.

சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைவதும் மேலும் மனதளவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வேளை கிரிக்கெட் துறையிலும் தடம் பதிக்கும் வேளை பாடசாலை மட்டத்தில் சகல நவீன வசதிகளுடன் சிறந்த பயிற்சியாளர்களின் மூலம் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து உடுவில் வலி தெற்கு பிரதேச சபைக்கான தேர்தல் கால அலுவலகம் இன்று காலை திலங்க சுமதிபால மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரினால் உடுவில் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபைக்காக கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் பெருந்திரளான பிரதேச மக்கள் ஆதரவு தெரிவித்து நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget