Ads (728x90)

இந்திய குடியரசு தினம் கோலாகலமாக, நாடு முழுதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பை பார்வையிட்டார். இந்த அணிவகுப்பானது இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் அமைந்தது.

இது குறித்த அம்சங்கள்
01. குடியரசு தின விழாவில் முதன்முறையாக 10 ஆசியான் நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
02. ஆசியான் நாட்டு தலைவர்களுக்காக 100 அடி அகல மேடை அமைக்கப்பட்டுள்ளது. குண்டு துளைக்காத கண்ணாடியால், இந்த மேடை அமைக்கப்பட்டுள்ளது.
03. குடியரசு தின அணிவகுப்பு டி- 90 பீரங்கிகள் அணிவகுப்புடன் துவங்கியது.
04. 10 ஆசியான் நாட்டு தேசிய கொடிகளும் அணிவகுப்பின் போது எடுத்து செல்லப்பட்டது.
05. தரையிலிருந்து விண்ணில் சென்று தாக்கும் ஆகாஷ் ஏவுகணையும் இடம்பெற்றது.
06.நீண்ட தூரம் சென்று தாக்கும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் அணிவகுப்பில் இடம்பெற்றது.
07. பிரமோஸ் ஏவுகணை மற்றும் எதிரிநாட்டு ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ரேடார், நிர்பயா ஏவுகணை ஆகியவையும் இந்த அணிவகுப்பில் வலம் வந்தன.
08.முதன்முறையாக அதிக அளவில் பெண் வீராங்கனைகளின் சாகச நிகழ்ச்சி இடம்பெற்றது. பிஎஸ்எப்பை சேர்ந்த வீாரங்கனைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
09. மாநிலங்களின் கலாசாரத்தை எதிரொலிக்கும் வகையில், நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. 17 மாநிலங்கள் மற்றும் 6 அமைச்சகங்களின் வாகனங்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றன. மத்திய அரசின் திட்டங்களும் இதில் இடம்பெற்றன.
10. விமானப்படை விமானம், ஓட்டக அணிவகுப்பு, இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், சாஷ்ட்ரா சீமா பால் வீரர்கள் அணிவகுப்பும் இடம்பெற்றது.
11. டில்லி போலீசார் அணிவகுத்து சென்றனர்.
12. என்சிசியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவினர் அணிவகுத்து சென்றனர். வீர தீர செயல்களுக்கு விருதுபெற்ற 18 குழந்தைகளும் பங்கெடுத்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget