Ads (728x90)

நாட்டின் 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவரான பிறகு அவர் முதன்முறையாக குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றினார்.

முன்னதாக, குடியரசுத் தலைவரை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படை தளபதிகள் வரவேற்றனர்.


தேசியக் கொடியை ஏற்றிவைத்த குடியரசுத் தலைவர் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையின்போது வீரமரணம் அடைந்த விமானப்படையை சேர்ந்த ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கி கவுரவித்தார். விருதை நிராலாவின் மனைவி பெற்று கொண்டார்.

பின்னர் நடந்த முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் குடியரசுத் தலைவர் ஏற்று கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக 10 நாடுகளின் தலைவர்கள்:

பொதுவாக குடியரசுத் தின விழாவின்போது ஏதாவது ஒரு நாட்டின் தலைவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார். ஆனால், இம்முறை விழாவில் 10 ஆசியான் நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், புரூனை, லாவோஸ், மியான்மர், கம்போடியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளதால் சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்து அணிவகுப்பை காண்பதற்காக அமைக்கப்பட்ட மேடை முழுவதும் குண்டுதுளைக்காத கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது.

மோடி மரியாதை:

முன்னதாக அமர் ஜவான் ஜோதியில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், குடியரசுத் தலைவர் மற்றும் ஆசியான் நாட்டின் தலைவர்களை வரவேற்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget