Ads (728x90)

நைஜீரியாவின் யோபே மாகாணத்தில் உள்ள டாப்ச்சி பகுதியில் அரசு மகளிர் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு போகோ ஹராம் தீவிரவாதிகள் கடந்த 19-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் மாணவிகள், பேராசிரியைகள் பலர் காயமடைந்தனர். எனினும், இந்தத் தாக்குதலுக்குப் பிறகான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.

இந்நிலையில், கல்லூரியில் பயிலும் சுமார் 110 மாணவிகள் மாயமாகி இருப்பதாக நைஜீரிய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது, அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் அனைவரும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அரசு இதை உறுதிப்படுத்தவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு, நைஜீரியாவின் சிக்போக் பகுதியில் உள்ள பள்ளியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அதன் பின்னர், அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவிகள் விடுவிக்கப்பட்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget