Ads (728x90)

பப்புவா நியூ கினியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கு 30 பேர் பலியானதாக நம்பப்படுகிறது.

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது. 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வராத நிலையில் பப்புவா நியூ கினிய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) இந்நிலநடுக்கத்துக்கு 30 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் 300 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தொலைபேசி தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்ப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இயல்பு நிலை மீண்டும் திரும்பும் என்று பப்புவா நியூ கினியா அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget