
தற்போதைய அதிபர் வித்யா தேவி பண்டாரி, துணை அதிபர் நந்தா பகதூர் ஆகியோரின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலை நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுடனும் நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தியது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் நவராஜ் கூறியதாவது: வரும் மார்ச் 13-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும். ஒரு வாரத்துக்குப் பிறகு துணை அதிபர் தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Post a Comment