
எச்-1பி விசா வழக்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கி அமெரிக்க அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, புதிய விதிமுறைபடி வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு பணியமர்த்தப்படும் ஊழியர்களின் கல்வி தகுதி, அவருக்கு குறிப்பாக வழங்கப்படும் பணி, செய்யும் வேலையில் அவரது திறன் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அதற்கான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
அதுபோலவே மூன்றாவது நபரின் பணியிடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா மூன்றாண்டுகளக்கு வழங்கப்படாது. அதற்கு பதிலாக, அவர் பணியாற்றும் காலத்திற்கு மட்டும் வழங்கப்படும். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து மீண்டும் விசா பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எச் -1பி விசா நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேறுவோர் சேவை அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ளதாவது:
‘‘மூன்றாம் தரப்பு பணியிடங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலனை கருதியே இந்த விதிமறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு ஊழியர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களது சம்பளம் மற்றும் பணியிட சூழலை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். இதற்காகவே எச் -1பி விசா விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எச் - 1பி விசா மூலம் அழைத்து வரப்படும் ஊழியர்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பயன் அளிக்கும். அவர்களது சம்பளம் மற்றும் பணிச்சூழலும் உறுதிப்படுத்தப்படும்’’ என கூறியுள்ளது.
Post a Comment