
இந்த அமர்வில் இலங்கை உள்ளிட்ட 47 நாடுகள் உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சயித் ரஹத் அல் ஹுசைனினால் வருடாந்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசு இதுவரை மேற்கொண்டுள்ள செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்த மனித உரிமைகள் ஆணையாளரின் கண்காணிப்பு தொடர்பிலான விடயங்கள் இதன்போது அறிக்கைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் முன்னேற்ற அறிக்கை தொடர்பில் இலங்கை சார்பாக விடயங்களை வெளிவிப்படுத்திடுவதற்கு குழுவொன்று ஜெனிவா நோக்கிச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment