Ads (728x90)

தேசிய அரசாங்கத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான அமைச்சரவை மறுசீரமைப்பும் புதிய அமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இன்று(25) முற்பகல் 11.00 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

இன்று முன்னெடுக்கப்படவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பின்போது  இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய மற்றும் அதிகூடிய பொறுப்புக்கள் வழங்கப்படவிருப்பதாக  அரசாங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகளைத் தொடர்ந்து அமைச்சரவையில் மறுசீரமைப்பை உருவாக்க தேசிய அரசாங்கத்திலுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

அமைச்சரவையில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்ற ஒரு நடவடிக்கையே இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு என மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget