Ads (728x90)

அமைச்சரவையில் புதிய அமைச்சர்களின் சத்தியப்பிரமாணம் இன்று (25) இடம்பெறவுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று ஜப்பானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் அவருக்கும் புதிய அமைச்சொன்று வழங்கப்படவுள்ள நிலையில் இந்த விஜயத்தில் அவர் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அவருக்கு இன்று வழங்கப்படவுள்ள அமைச்சை பொறுப்பேற்காதிருக்க அவர் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஜனாதிபதியின் தலைமையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஐக்கிய தேசியக் கட்சியை கடுமையாக விமர்சித்த ஒருவர் ஆவார். ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அரசாங்கம் அமையக் கூடாது என பகிரங்கமாக குரல் எழுப்பியவரும் ஆவார்.

தற்பொழுது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலேயே அரசாங்கம் அமையப் போகின்றது. இதில் அவர் அங்கத்துவம் எடுக்காதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget