
சவுதி அரேபியா சமீபகாலத்தில் மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாக ராணுவத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பார்க்கப்படுகிறது.
ராணுவத்தில் சேர விருப்பமான பெண்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு என்றும் இது கட்டாயம் இல்லை என்றும் சவுதி அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
ராணுவப் பணியில் சேர விருப்பமுள்ள பெண்கள் சவுதியின் ரியாத், மக்கா, மதீனா, அல்-காசிம், ஆஸிர், அல் பஹா மற்றும் ஷர்கியா ஆகிய நகரங்களில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள்.
சவுதி ராணுவத்தில் சேருவதற்கான அடிப்படை தகுதிகள்:
விண்ணப்பிப்பவர்கள் அந்த நாட்டின் குடிமகளாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதியாக, உயர்நிலை பள்ளிப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்திருக்கவேண்டும்.
குறைந்தபட்ச வயது 25, அதிகபட்ச வயது வரம்பு 35.
ராணுவத்தில் சேரும் பெண்களின் காப்பாளர்களும் அப்பெண்கள் வேலை பார்க்கும் மாகாணத்தில் இருப்பிடம் இருக்க வேண்டும்.
முன்னதாக, சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகின்றனர். அந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த ஆண்டு செப்டம்பரில் நீக்கப்பட்டது.சவுதியின் 87-வது தேசிய தினத்தையொட்டி கடந்த ஆண்டு பெண்கள் முதல்முதலாக மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment