Ads (728x90)

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி 20 தொடரில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மார்ச் 12-ம் தேதியும், 2-வது ஆட்டம் 15-ம் தேதியும், 3-வது ஆட்டம் 18-ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த 3 ஆட்டங்களும் வதோதராவில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மிதாலி ராஜ் வழக்கம் போல் கேப்டனாக செயல்பட உள்ளார்.

அணி விவரம்

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மான்பிரீத் கவுர், மந்தனா, புனம் ராவத், ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா, சுஷ்மா வர்மா, எக்தா பிஷ்ட், பூணம் யாதவ், ராஜேஷ்வரி, ஷிகா பாண்டே, சுகன்யா பரிதா, பூஜா, தீப்தி சர்மா.

Post a Comment

Recent News

Recent Posts Widget