இலங்கையில் மார்ச் 6-ம் தேதி முதல் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய 3 அணிகள் கலந்து கொள்கின்றன.இந்நிலையில் இத்தொடரில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் விலகி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட 30 வயதான மேத்யூஸ், அதன் பின்னர் வங்கதேச தொடரில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்ற நிலையில் காயம் காரணமாக விலகினார்.
இந்நிலையில் முத்தரப்பு டி 20 தொடரில் அணிக்கு திரும்பும் வகையில் பயிற்சியில் ஈடுபட்ட போது மேத்யூஸூக்கு காலின் பின்புற தசை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து டி 20 தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனான தினேஷ் சந்திமால் அணியை வழிநடத்தக்கூடும் என கருதப்படுகிறது. வங்கதேச தொடரிலும் சந்திமால்தான் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment