Ads (728x90)

இன்று   அமைச்சரவையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு அமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரத்தின் கீழ் சட்டம் ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை, லக்ஷ்மன் கிரியல்லக்கு அரச தொழில் முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சும், அமைச்சர் கபீர் ஹசீமிற்கு உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.

ஹரீன் பர்ணாண்டோவிற்கு தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை அமைச்சும் ரவீந்திர சமரவீரவிற்கு வனவளத்துறை மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சும், பியதாச கமகேவிற்கு இளைஞர் விவகாரத்துறை ராஜாங்க அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு சாகல ரட்நாயக்காவிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் ஜே.சி. அலவத்துவல உள்நாட்டு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர, ஹர்ஷ டீ சில்வா தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget