
ஸ்காட்லாந்து யார்டு தலைவி கிரெஸிடா டிக் தெரிவித்ததாவது:இளைய தலைமுறையினரிடையே கொலை மற்றும் கத்திக்குத்து சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் அதிகரித்து வருகின்றன.சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் வீடியோக்கள் மக்களை வன்முறையின் பக்கம் இழுக்கிறது. ஏதாவது ஒரு விதத்தில் மக்கள் கோபமடையவும், விரைவாக சண்டையிடவும் சமூக வலைதளங்கள் நிச்சயம் ஒரு காரணமாக உள்ளன.
பிரிட்டனில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் கத்திகுத்துச் சம்பவங்கள் 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக காவல்துறை வட்டார புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இளைய தலைமுறையினர் கத்தி குத்து சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க சமூக வலை தளங்களில் பிரிட்டன் அரசு பிரசாரங்களை மேற்கொண்டுஉள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசு ரூ.12 கோடி ஒதுக்கியுள்ளது.
Post a Comment