Ads (728x90)

வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன், தலைநகர், பியாங்யாங்கில், 10 ஆண்டுக்கு பின் நடந்த, தென் கொரிய கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சியை, நேற்று பார்த்து ரசித்தார். கிழக்காசிய நாடான வடகொரியா, அண்டை நாடான, தென் கொரியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறது.

இந்நிலையை மாற்றும் நோக்கில், சமீப காலமாக, சமாதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, இரு நாடுகள் இடையே, மாநாடு நடக்கவுள்ளது. இந்நிலையில், வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில், 10 ஆண்டுக்கு பின், மிக அரிதாக, தென் கொரிய கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், 120 கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த இசை நிகழ்ச்சியை, வடகொரியா அதிபர், கிம் ஜாங் உன், தன் மனைவியுடன் நேரில் பார்த்து ரசித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.இத்தகவலை, தென் கொரியா கலாசாரதுறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget