
இந்த நிலையில் ஹிந்தி வெப் சீரியல் ஒன்றை இயக்கித் தருமாறு முன்னணி நிறுவனம் ஒன்று பிரபு தேவாவை கேட்டிருக்கிறது. ஆனால் அதனை அவர் மறுத்து விட்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
இன்றைக்கு பொழுதுபோக்குவதற்கு மக்களுக்கு நிறைய களங்கள் திறந்த விடப்பட்டிருக்கிறது. அதில் வெப் சீரியலும் ஒன்று. இதனை யாரும் தடுக்கவும் முடியாது. எல்லா டெக்னாலஜியை போன்று இதுவும் வரும், பின்னர் கடந்த போகும். வெப் சீரியலில் நடிக்கவும், இயக்கவும் எனக்கு வாய்ப்புகள் வந்தது உண்மைதான். நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. ஆனால் இயக்குவதை மறுத்து விட்டேன். என்றார்.
Post a Comment