Ads (728x90)

சனிக்கும், செவ்வாய்க்கும் பூஜைகள், வழிபாடுகள் செய்தால் இந்த கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

இரண்டு பேரில் ஒருவரை ஒருவருக்கு பிடிக்கவில்லையென்றாலே எப்போதும், முட்டலும் மோதலுமாகத்தான் இருக்கும். நவக்கிரகங்களுக்கும் இது பொருந்தும்.

நவகிரகங்களில் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. ஒருவர் பெயர் புகழுடன் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருக்கிறார் என்றால், அதற்கு செவ்வாய் கிரக பலமே காரணமாக இருக்கிறது.

எண்ணற்ற சொத்துக்களுக்கு உரிமையாளராக இருப்பவர்களுக்கு செவ்வாய் அதிக பலத்துடன் இருப்பார். தைரியமாக ஒருவர் எந்த செயலையும் செய்கிறார் என்றால் அதற்கு காரணமானவர் செவ்வாய். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால் அந்த நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சொத்துக்கள் சேராது. சேர்ந்தாலும் தங்காது.

ஒருவருக்கு அதிகமாக கோபம் வருகிறது என்றால் அதற்கும் காரணம் செவ்வாய் கிரகம்தான். பூமிக்கு அதிபதியான செவ்வாய், நிலஅதிர்வு, பூகம்பம் போன்றவற்றுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

செவ்வாய், சூரியனில் இருந்து நான்காவது கிரகம். இது சூரியனை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. செவ்வாய்க்கு உரிய நிறம் சிகப்பு. அதனால் சிகப்பு நிறமுடைய பவளம் அணிவது நல்லது.

செவ்வாய் கிரகத்திற்கு அடுத்தப்படியாக மிகமிக முக்கியமான கிரகம் சனி. ஈஸ்வரனையும் விடாததால் சனீஸ்வரர் என்று சிறப்பு பெயரை பெற்றவர் சனி பகவான்.

பல தலைமுறைக்கும் சொத்துகளை வாரி வாரி வழங்கும் கிரகம் சனி. முப்பது ஆண்டுகள் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது ஆண்டுகள் தாழ்ந்தவனும் இல்லை என்று சனியின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டே சொன்னார்கள். ஒரு ராசியில் இருக்கும் சனிகிரகம் மீண்டும் அதே ராசிக்கு வந்து சேர முப்பது ஆண்டுகள் ஆகும். ஒருவர் திறமைசாலியாக இருந்தாலும் அவருடைய செயல்கள் மந்தமாக இருந்தால் சனியின் ஆதிக்கத்தை கொண்டவர் என்று அறியலாம்.

சுறுசுறுப்பு குறைந்த தன்மையை சனி கிரகம் தருகிறது. உடல் ஊனமுற்றவர்கள் குறிப்பாக நடப்பதற்கு சிரமப்படுகிறவர்களின் ஜாதகத்தில் சனி பலவீனம் கொண்டதாக இருக்கும் என்பதை அறியலாம். சனி பகவான் தயவு, தாட்சண்யம் பார்க்க மாட்டார். அவரை பொறுத்தவரையில் ஏழையும் ஒன்றுதான், பெரும் பணக்காரனும் ஒன்றுதான்.

சனியின் கொடுமையான பாதிப்பு இருக்கும் காலத்தில் ஒருவன் ஆடம்பரமான எதையும் விரும்பக் கூடாது. அந்த நபர் உடுத்தும் ஆடை கூட மிக சாதாரணமானதாக இருக்க வேண்டும். இத்தகைய தன்மைகளை சனி கிரகம் கொண்டிருந்தாலும் சனி கிரகத்தை போல ஒரு அற்புதமான வாழ்க்கையை தரும் கிரகம் இருக்க முடியாது.

சனி கிரகத்தின் துணை ஒருவனுக்கு இருக்குமானால் அந்த நபரை எவராலும் வெல்ல முடியாது. இப்படியாக செவ்வாய் மற்றும் சனியின் செயல்பாடுகள் தனி நபர்களின் அபரிதமான வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது. ஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகமானது சனியை பகை கிரகமாக நினைக்கவில்லை. ஆனால் சனி கிரகம் செவ்வாயை பகை கிரகமாக நினைக்கிறது. இதனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாயும்-சனியும் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்திருக்கும் போது மோதிக் கொள்கிறார்கள்.

இதனை கிரக யுத்தம் என்று சொல்வார்கள். செவ்வாய்-சனி ஒரே ராசி வீட்டில் இணைந்திருக்கும் போது அதனுடன் வேறு கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஒரளவு பாதிப்பு குறையும். அப்படி இல்லாமல் செவ்வாய்-சனி மட்டும் ஒன்றாக இணைந்திருந்தால் அவை எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அந்த பாவத்தை பலவீனப்படுத்தி விடும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget