Ads (728x90)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டிருக்கின்றார். இது தொடர்பான நியமனக் கடிதம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்குக் கிடைத்திருக்கின்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் கிடைத்த மூன்று பெயர்களிலிருந்து பல்கலைக் கழகப் பேரவை மதிப்பீட்டின் படி முதல் நிலையைப் பெற்றிருந்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமித்துள்ளார்.

பல்கலைக்கழகப் பேரவையின் பரிந்துரையின் அடிப்படையில் மூவரினது பெயர்கள் கடந்த 13ம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget