Ads (728x90)

ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள புதிய படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜயசேதுபதி, சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், பகத்பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் முதன்முறையாக விஜயசேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள சமந்தா, அவரது நடிப்பைப் பார்த்து பலமுறை தனது ஆச்சர்யத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த அளவுக்கு இந்த படத்தில் தான் நடித்துள்ள ஷில்பா என்ற திருநங்கை வேடத்தில் வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறாராம் விஜயசேதுபதி.

இதை அப்படத்தில் நடித்து வந்தபோதே விஜய சேதுபதியிடம் சொல்லி அவர் உற்சாகப்படுத்திய சமந்தா, சில பேட்டிகளிலும் விஜயசேதுபதியின் நடிப்பு குறித்து பெருமையாக கூறி வருகிறார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget