
மலையாளத்தில் உருவான 'ஒரு ஆதார் லவ்' படத்தில் இடம்பெற்ற ஒரே பாடலில் தனது புருவம் உயர்த்தும் செயல்களால் கடந்த மாதம் முதல் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர். இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இவருக்கு இந்தப்படம் வெளியாவதற்கு முன்பே, மலையாளத்தில் மட்டுமல்ல தெலுங்கில் இருந்தும் வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.
அந்தவகையில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஈகோ' என்கிற படத்தின் தயாரிப்பாளர், பிரியா வாரியரை தங்களது புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இதற்காக பிரியா வாரியாருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். 'ஈகோ'வில் ஹீரோவாக நடித்த ஆசிஷ் ராஜ் தான் இந்தப்படத்திலும் நாயகனாக நடிக்கிறாராம்.
Post a Comment