Ads (728x90)

பாகுபலி-2 படத்தை அடுத்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்குகிறார் ராஜமவுலி. ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கி விட்டது. மேலும், இந்த படத்தில் வில்லனாக டாக்டர் ராஜசேகர் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவின. ஆனால் அந்த செய்தியை டாக்டர் ராஜசேகரின் மனைவியும் நடிகையுமான ஜீவிதா மறுத்துள்ளார்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், எங்கள் மகள் ஷிவானி அறிமுகமாகும் படத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ராஜமவுலியை நாங்கள் அழைக்க சென்றோம். அதன்பிறகுதான் ராஜமவுலி படத்தில் ராஜசேகர் வில்லனாக நடிப்பதாக செய்தி பரவியது. ஆனால், ராஜமவுலி தனது படத்தில் நடிக்க டாக்டர் ராஜசேகரை அணுகவில்லை. அதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று ஜீவிதா ராஜசேகர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget