Ads (728x90)

ஜப்பானைச் சேர்ந்த ரைஸா ஹிராகோ புகழ்பெற்ற ஃபேஷன் மாடல். 47 வயதாகும் இவர், 20 வயதுபோல் தோற்றம் அளிக்கிறார். தன்னுடைய இளமையான தோற்றத்தால் நீண்ட காலம் நிலையான புகழுடன் வெற்றிகரமான மாடலாக இருந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் இவர் படங்கள் போட ஆரம்பித்த பிறகு மேற்கத்திய நாடுகளில் ஏராளமான ரசிகர்களைப் பெற்று வருகிறார். இவரது படங்களைப் பார்த்து, ரசிகர்களாக மாறியவர்கள், இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காகத் தகவல்களைத் தேடியபோதுதான், 47 வயது என்பதை அறிந்து ஆச்சரியமடைந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச ஊடகங்களில் ரைஸாவைப் பற்றிய செய்திகள் வெளிவந்தன. இன்ஸ்டாகிராமில் அதுவரை 90 ஆயிரம் பேர் இவரைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தனர். அதற்குப் பிறகு 2 லட்சம் பேராக எண்ணிக்கை உயர்ந்தது.

இன்று 2,22,000 பேர் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ”தோல் சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான் என் இளமைக்கு காரணமா என்று எல்லோரும் கேட்கின்றனர். இவை எல்லாவற்றையும் விட என்னுடைய மரபணுதான் இளமைக்கு காரணமாக இருக்க முடியும்” என்கிறார் ரைஸா ஹிராகோ.

Post a Comment

Recent News

Recent Posts Widget