Ads (728x90)

ஐபிஎல் 11வது சீசன் போட்டிகள் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் கலந்துகொண்ட இதில் ஒவ்வொரு அணியின் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை கைப்பற்றும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளையும் ஒரு முறையாவது வீழ்த்திய ஒரே அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளை இரண்டு முறையும் வீழ்த்தியுள்ளது. 14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது.

Post a Comment

Recent News

Recent Posts Widget