Ads (728x90)


தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் இடி மின்னல் தாக்கத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார் என்று தெரிவித்தார்.


தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் சப்ரகமுவ, மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி இடம்பெறக்கூடும்.

சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget