Ads (728x90)

அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிமைப்படுத்தி விட்டு எதிர்க் கட்சியில் அமர்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சியாக இருந்தே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானங்களை எடுக்கின்றது. தனியான குழுக்கள் தமக்கு வேண்டியவாறு தீர்மானங்களை எடுப்பதைப் போன்று அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியைத் தனிமைப்படுத்தி தாம் அரசாங்கத்திலிருந்து விலகினால், ஐ.தே.கட்சி தனியான அரசாங்கம் அமைத்துக் கொள்ளும்.

மஹிந்த ராஜபக்ஷ குழுவின் முடிச்சுக்களுக்கு நாம் அகப்படப் போவதில்லை. எமது இலக்கு ஸ்ரீ ல. சு.க.யின் ஆட்சியை அமைப்பதாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget