Ads (728x90)

நாடு முழுவதும் அன்று ரணிலுக்கு முடியாது என போஸ்டர் ஒட்டியதற்குக்குக் காரணம் அவருக்கு முடியும் என்று நன்கு விளங்கியிருந்ததனால் ஆகும் என தெரிவிக்கும் அமைச்சர் மங்கள சமரவீர, இன்று எனக்கு எதிரான குற்றச்சாட்டு முன்வைக்கின்றார் எனின்,  என்னாலும் முடியும் என்பது அவருக்கு நன்கு தெரியும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பதுளை நகரில் நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய கூட்டு ஒன்றியத்தினால் நேற்று (20) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பணியாக இருப்பது மக்களுக்கு வரிச்சுமையை நீக்கி பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதாகும். இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் மறந்து, அவர் என்னைப் பற்றி அதிகம் குற்றம்சாட்டி வருவது அவர் என்னை நன்கு அறிந்துள்ளதனாலாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget