Ads (728x90)

தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 600 பேர் இலக்காகியுள்ளதாகவும் இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தென் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் பீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 12 பேர் சிறு பிள்ளைகள் எனவும் ஒருவர் கர்ப்பிணித் தாய் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஏப்றல் மாதம் முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் இந்த நோய் பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, மாத்தறை பெரிய வைத்தியசாலை, அல்பிட்டிய, கும்புருப்பிட்டிய, தங்கல்ல மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களிலுள்ள அரச வைத்தியசாலைகள் என்பவற்றிலிருந்து இந்த நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget