Ads (728x90)

கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி, குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இயக்குனர் சுனில் சிங் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடியானது.

இந்த நிலையில், டில்லியை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை போலீஸ் கமிஷனர் வேத் பூஷன், ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார். தற்போது இவர் தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார்.

மேலும் அவர் கூறுகையில், துபாய் தடவியல் போலீஸின் தடவியல் அறிக்கை திருப்திகரமாக இல்லை. அதோடு ஸ்ரீதேவி துபாயில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விசாரணைக்காக நாங்கள் சென்றபோது அவர்கள் ஸ்ரீதேவி தங்கியிருந்த அறைக்குள் எங்களை அனுமதிக்கவில்லை.

அதையடுத்து பக்கத்து அறையில் தங்கியிருந்து அவரது மரணம் குறித்து நாங்கள் விசாரித்தபோது அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிய வந்தது. ஆனால் அதை யாரும் சொல்ல மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை கமிஷனர் இந்த குற்றச்சாட்டு ஸ்ரீதேவி மரணத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget