
மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் திரைப்பட விழாவின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. படம் திரையிட்டு முடிந்தவுடன் அங்கேயே அந்த விருது வழங்கப்பட்டது. அதனை ஸ்ரீதேவி சார்வில் பிரபல இந்தி பட இயக்குனர் சுபாஷ்கய், மற்றும் தயாரிப்பாளர் நர்மதா கோயல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஆஸகர் விருதுக்கு அடுத்து உயர்ந்த திரைப்பட விருதுதாக கேன்ஸ் விருது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. இதே மாம் படத்திற்காகத்தான் இந்திய அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் ஸ்ரீதேவி பெற்றார். அவர் சார்பில் ஸ்ரீதேவியின் மகள்களும், கணவரும் அந்த விருதை பெற்றுக் கொண்டனர்.
Post a Comment