Ads (728x90)

தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு சுகாதர போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹவைப் பணித்துள்ளார்.

இதன்படி, 10 ஹைஃப்ளோ ஒட்சிசன் இயந்திரங்கள் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. வைத்தியர்கள் கோரும் அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கேட்டுள்ளார்.


காலி கராப்பிட்டிய, மாத்தறை, எல்பிட்டிய, கம்புறுப்பிட்டிய, தங்காலை, வலஸ்முல்ல ஆகிய வைத்தியசாலைகளில் சுமார் 600 பேர் இந்த நோய்க்கான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.


இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளான பலர் உயிரிழந்துள்ளனர். இன்புளுவென்சா வைரஸ் காரணமாக இந்த நோய் பரவி வருவதாக தெரியவந்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget