Ads (728x90)

சீனாவின் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதி பொருட்களின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 25 சதவீத  கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டார்  வரி விதிப்பின் முதல் சுற்று இன்று முதல் அமலாகிறது.

இதே நாளில் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதித்து நிலைமையை சீனா சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி பொருட்களுக்கான இந்த கூடுதல் வரி விதிப்பு, உலகின் மிகப் பெரிய இரு பொருளாதார நாடுகளுக்கு இடையில் பெரும் வர்த்தக போரை உருவாக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்த வர்த்தக போர் உலக பங்குச்சந்தைகளில் கொந்தளிப்பை உருவாக்கி, உலக வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை பாதிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget