Ads (728x90)

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இப் பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளன.

இந்தப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget